குட்டி குழந்தைகளுக்கான அறிவு சம்பந்தப்பட்ட பதிவுகளை இங்கே காணலாம் - பாடல், படங்கள், பாடப்புத்தகங்கள், வரைபடங்கள், உணவுகள், அனைத்தும் ஒரே இடத்தில்
RSS

Tuesday, February 28, 2017

தமிழ் உயிர் எழுத்துக்கள் பயிற்சி ஏடு -2 | தமிழ் அறிவு குழந்தைகள்

தமிழ் உயிரெழுத்துக்கள் தனித்தனி பயிற்சி ஏடுகள்.

கீழ்காணும் படங்களில் சொடுக்கி பிரதி எடுத்துக்கொள்ளலாம். பிடிஎப் (pdf ) முறையில் வேறு ஒரு பயிற்சி ஏடுகளுடன் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.















நன்றி:ஸ்டடி வில்லேஜ் 
தொகுப்பு: பாபு நடேசன் MCA | கோகிலா பாபு Msc, BEd, Mphil.

Wednesday, February 22, 2017

தமிழ் உயிர் எழுத்துக்கள் பயிற்சி ஏடு -1 | தமிழ் அறிவு குழந்தைகள்

குழந்தைகளுக்கான பயிற்சி ஏடுகள்

கீழ்காணும் படத்தில் சொடுக்கி முழு அளவு படத்தினை பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம். அடுத்த பதிவில் தனித்தனி எழுத்துக்களின் பயிற்சி ஏடுகளை இணைக்கிறேன். நன்றி.






தொகுப்பு : பாபு நடேசன் MCA | கோகிலா பாபு Msc BEd Mphil

Thursday, February 16, 2017

எழுத கற்றுக் கொடுப்போம் | தமிழ் அறிவு குழந்தைகள்

தமிழ் எழுத கற்றுக் கொடுப்போம் 
நமது குழந்தைகள் கைகளால் எழுதிக் கற்கும் முறை தான் அவர்களின்  மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் அதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

உலக அளவில் குழந்தைகள் சிலேட், பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விசைப்பலகைகளை பயன்படுத்தியும்,  தொடுதிரை கணினிகளில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்துவருகிறது.


படிக்கும் ஆற்றலுக்கும் கையெழுத்துக்கும் தொடர்பு உண்டு, குழந்தைகள் தங்களின் கைகளால் எழுதும்போது, அவர்களின் மூளைகள் அந்தச் செயலுடன் ஒத்திசைந்து எதிர்வினையாற்றுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கையால் எழுதும் பழக்கத்துக்கும், படிக்கும் பழக்கத்துக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேர்த்தியான கையெழுத்து வாய்ப்பதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அடித்தளமிடப்பட வேண்டும்.

மொழியின் வடிவமும் மரபும்

ஒரு மொழியின் வரிவடிவமே எழுத்தாகும். வெவ்வேறு மொழிகளின் வரிவடிவங்கள் நேர் கோடுகளாலும் வளை கோடுகளாலும் கலந்தே காணப்படுகின்றன. காலத்தால் மாறுபடாத இவ்வரிவடிவங்ககளை நாம் துல்லியமாகக் காட்டப்படாவிட்டால் நமது மொழியின் மரபு சிதைவுற்று போகும். எனவே எழுதுபவரும் எழுதப் கற்றுக்கொடுப்பவரும் வரிவடிவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளல் வேண்டும்.

குழந்தைகளின் கையெழுத்துச் சரியாக அமைய பயிற்சி பெறும் முதல் எழுத்து சரியாக அமைய வேண்டும். ஆரம்ப பள்ளி வகுப்பாசிரியர்களின் வழிகாட்டல் இதற்கு பெரும் உறுதுணையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாசிரியர்களின் பணி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் ஆரம்ப வகுப்பாசிரியர்கள் தம் பணிக்குரிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி  ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே நன்றாக கவனித்து எழுதும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர் மட்டுமின்றி பெற்றோர்களும் வீட்டுப்பாடங்களை சரியான திட்டம்மிடலோடு கற்றுக்கொடுக்க வேண்டும்.

உறுதியான கட்டடத்துக்கு தரம் வாய்ந்த அத்திவாரம் தேவைப்படுவது போல நம் தாய் மொழியின் ஆரம்ப வரிவடிவங்கள் செம்மையாக அழகாக அமைப்பதில்  கருத்தில் கொள்ள வேண்டும்.
  • கீழ்காணும் கருத்தினை பெற்றோரும் மனதில் கொள்ளவேண்டும்.
  •  
  • எழுத்தின் வடிவங்களை பற்றிய திருத்தமான மனப்பதிவு
  •  
  • வாசிப்பவர் எளிதில் புரியக்கூடிய எழுத்தமைப்பு.
  •  
  • விரைவாக எழுத எழுத்தின் தொடக்கமும் முடிவும் சரியான திசையில் அமைதல்.
  •  
  • கோட்டின் மேலும் கீழும் அமையும் பாகங்களை விளங்கி நேர் கோட்டில் எழுதுதல்.
  • குழந்தைகளின் அசைவுக்கு உகந்த விரல் அமைவு.
  •  
  • வகுப்பறைகளில் வெவ்வேறு வேறுபாடுகளை கொண்ட மாணவர்களை  காணமுடியும். அவைகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்த முடியும்.
  •  
  • எழுத்துக்களை தலை கீழாகவும் இடம் வலமாகவும் மாற்றி எழுதுபவர்கள்.
  •  
  • ஒரே வரிவடிவத்தை பல எழுத்துக்களாகப் பயன்படுத்தும் மாணவர்கள்,
  • எழுத்துக்களின் குறில், நெடில் வேறுபாடுகளை சரியான ஒலி வடிவத்தையோ உணராத மாணவர்கள்.
  •  
  • எழுது கருவியைச் சரியாகப் பிடிக்காமல் எழுதும் போது கைச்சோர்வு அடைவதுடன் தாறு மாறாகச் சிதறும் எழுத்துக்களை எழுதும் மாணவர்கள்.
  •  
  • எழுதும் போது எழுத்துக்களின் சில பாகங்களை தமது வசதிக்கேற்ப உருமாற்றி எழுதும் மாணவர்கள்.
பயிற்சிப் புத்தகங்களைச் மட்டும் சரி பார்த்தால் இவற்றை அடையாளம் காண முடியாது, ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே கவனித்தால் கண்டிப்பாக ஆசிரியர் மொழியின் மரபுகளை காப்பாற்றலாம்.
மாணவர் எழுத்துப் பிழை விடுவது குறில், நெடில் ஒலி சப்தங்களின் உணராமையாகும். உச்சரிப்பைப் பிழையாக மேற்கொள்வதே இதற்கான காரணமாகவும் அமைந்து விடுகிறது. இதனைப் பெரும்பாலானோர் கருத்தில் கொள்வதில்லை. இதனால் அதிகமான சொற்பிழைகளை குழந்தைகளிடத்தில் எதிர்பார்க்கலாம்.

முன்னைய காலங்களில் எழுத்துக்களைப் பெயர் வடிவில் கற்ற மாணவரிடம் இப்பிழைகள் காணப்படவில்லை. ஆனால் கற்றலை எளிதாக்க எழுத்துக்களை ஒலி வடிவாக கற்பிக்கும் புதிய கல்வி முறையால் இன்று எழுத்துப் பிழைகள் மலிந்து விட்டன.

கையெழுத்து தலையெழுத்து !

எழுத கற்றுக் கொடும்போது கவனிக்க வேண்டியவை.
  • எழுத்து வடிவங்கள் மிகச் சரியாக எழுத கற்றுக்கொடுக்க வேண்டும்.
  •  
  • எழுத்துகளுக்கு இடையிலும் சொற்களுக்கு இடையிலும் பொருத்தமான, போதுமான இடைவெளி இருக்க்குமாறு கற்றுக்கொடுக்கவேண்டும்.
  •  
  • எழுத்து வரிசை நேர்கோட்டில் இருத்தல் அவசியம்.
  • எழுதுகிறபோது, ஏனோ தானோவென்று கற்றுக்கொடுக்காமல்,  அந்த எழுத்துகளுக்கு உரிய மரியாதையைத் தாருங்கள்.
  •  
  • பழைய எழுத்து பொருட்களை கொண்டு எழுதாதீர்கள்
  •  
  • எழுதிய எழுத்துக்கள் உங்கள் குழந்தையின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் வைத்து வடிவங்களை பதியுங்கள்.
  •  
  • எழுதும் வேகம், கைவாகு இவைகளைப் பொறுத்து, பொறுமையாக கற்றுக்கொடுங்கள்.

  • தவறாக எழுதிய எழுத்தின் மீதே திரும்பவும் எழுத கற்றுக்கொடுக்காதீர்கள். அடித்தல் திருத்தல் இல்லாமல் இருப்பதே சிறப்பு.
எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குள் அழகாக எழுதிப் பழக முடியும். உங்களின் முயற்சியின்  பயிற்சியும் கண்டிப்பாக  வெற்றியை தேடித்தரும்.

தமிழ் பயிற்சி ஏடுகளை அடுத்த பதிவில் இணைக்கிறேன் நன்றி!!!
தொகுப்பும் பதிவும்
பாபு நடேசன்

Tuesday, February 14, 2017

தமிழ் உயிரெழுத்துக்கள் - கையெழுத்து பயிற்சி ஏடு முன்னோட்டம்

கணிப்பொறி காலமான இன்றைக்கு எழுதுவதை தட்டச்சு பலகைகள் எளிமையாக்கி உள்ளது, யூடூப் போன்ற தளங்கள் மிகவும் உதவியாக உள்ளது, இன்றைக்கு குழந்தைகளுக்கென்று தனி நுண்ணறிவு பேசிகள் பல வடிவில் வந்துவிட்டன, இருந்தாலும் கையினால் எழுதினால் தான் குழந்தைகளின் எதிகாலம் பிரகாசமாக இருக்கும், பள்ளிகளில் கையெழுத்திற்க்கென்று தனி மதிப்பெண்கள் வழங்குவது இன்றும் வழக்கமாக உள்ளது.

ந‌ன்றாக எழுதுவத‌ற்கு‌ம், க‌ல்‌வி க‌ற்பத‌ற்கு‌மான அடி‌ப்படையான நடைமுறைக‌ளி‌ல் கையெழு‌த்து இ‌‌ன்‌றியமையாததாக ‌விளங்குகிறது. இள‌ம் வயது குழ‌ந்தைக‌ள் இ‌ந்த‌க் கலை‌யி‌ல் ‌திறமை‌மி‌க்கவ‌ர்களாக உருவாகாம‌ல் போவத‌ற்கு காரண‌ம் எழுதுவதை த‌வி‌ர்‌ப்பதுதா‌ன். மேலு‌ம் அவர்கள் வளர்ந்த பிறகு வகு‌ப்பறைக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் பாட‌ம் நட‌த்து‌ம் போது கு‌றி‌ப்பெடு‌ப்ப‌திலு‌ம், பாட‌த்தை தொட‌ர்‌ந்து கவ‌னி‌ப்ப‌திலு‌ம் ‌பிர‌ச்சனையை எ‌தி‌ர்கொ‌ள்ள‌ச் செ‌ய்கிறது.

குழ‌ந்தைகளு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் மீ‌ண்டு‌ம் எ‌வ்வாறு எழுத வே‌ண்டு‌ம் எ‌ன்பதை தொட‌ர்‌ந்து அ‌றிவுறு‌த்துவத‌ன் மூல‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பாட‌த்‌தி‌ட்ட‌ங்க‌ள் அனை‌த்‌திலு‌ம் க‌ல்‌விக‌ற்கு‌ம் ‌திறனை ஒ‌ட்டுமொ‌த்தமாக அ‌திக‌ரி‌க்க இயலு‌ம்.

சரி இனி தமிழ் உயிரெழுத்துக்களை எழுதுவது எப்படி என்று பார்ப்போம் 









                                      



அப்புறம் என்ன இன்றைகே இதை நுண்ணறிவு பேசியில் காண்பியுங்கள், காண்பித்ததோடு விட்டுவிடாமல் அவர்களை எழுதவும் செய்யுங்கள் | எழுத்து பயிற்சிக்கான, அச்சிடக்கூடிய பயிற்சி ஏடுகளை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி:சுகந்தி தமிழ் அநிதம்.

தொகுப்பு; பாபு நடேசன் | கோகிலா பாபு

தமிழ் அறிவு குழந்தைகள் - குட்டி குழந்தைகளுக்கான பிரத்தியோக தளம்

குட்டி குழந்தைகளுக்கான அறிவு சம்பந்தப்பட்ட பதிவுகளை இங்கே காணலாம் - பாடல், படங்கள், பாடப்புத்தகங்கள், வரைபடங்கள், உணவுகள், அனைத்தும் ஒரேய இடத்தில் விரைவில்